Friday, January 20, 2012

லாபம் தரும் விவசாய பங்குகள்



  • RALLIS( A TATA GROUP COMPANY )
  • COROMANDEL( CHENNAI BASED MURUGAPPA GROUP COMPANY )
  • CHAMBLFERT
  • JISLJALEQS
  • BAYERCROP( A GERMAN BASED COMPANY )

இளமையிலேயே முதலீடு..

ஓய்வு காலத்திற்கான முதலீட்டை 45 வயதிற்கு பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. சம்பாதிக்க தொடங்கியவுடனேயே ஆரம்பிக்கலாம்.  25 வயதில் இன்றைக்குச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பவர்கள், யூ.டி.ஐ. ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான் மற்றும் டெம்பிள்டன் ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான்களில் மாதம் 500 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், 30 ஆண்டு கழித்து (ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்) கிடைக்கும் வருமானம் 11. 30 லட்சம் ரூபாய்.

ரிஸ்க் இல்லாத முதலீடு

ரிஸ்க் இல்லாத முதலீடு இல்லை என்றாலும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ரிஸ்க் குறைவானவை என்பதோடு மிதமான வருமானம் தருபவை. இந்த வகை ஃபண்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஜே.எம். ஜி - செக்யூரிட்டி ரெகுலர் . இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.40% வருமானத்தையும், ஆரம்பம் முதல் 10.24% வருமானத்தையும் தந்துள்ளது

Thursday, January 19, 2012

நல்ல லாபம் கிடைக்கும் பங்கு

சில துறை பங்குகள் சில சமயங்களில் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கும். அந்த துறைக்கு இப்போது நல்ல பிஸினஸ் இல்லை என்கிற ஒரே காரணம் தவிர, அந்த பங்கில் எந்த பிரச்னையும் இருக்காது. இது மாதிரி பின்னணி கொண்ட பங்குகளை விலை குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போட்டால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். என்ன பங்கு என்றுதானே கேட்கிறீர்கள்? செயில் என சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்குதான் அது. டிசம்பர் 28-ம் தேதி இந்த பங்கொன்றின் விலை ரூ.80.