Monday, August 22, 2011

போலிகள் ஜாக்கிரதை!

எச்சரிக்கும் செக் லிஸ்ட்..
  • வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.

  • பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

  • சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.

  • சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

  • மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!

  • குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.

  • சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.

  • அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!

Tuesday, August 9, 2011

ரூ.19,000-ஐ தாண்டியது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.19,504-க்கு விற்பனையானது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,438 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.688 அதிகரித்தது. ஒரு கிராமுக்கு ரூ.86 உயர்ந்தது.

அதேவேளையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.62.95-க்கும், பார் வெள்ளியின் விலை ரூ.58,845-க்கும் விற்கப்பட்டது.

Tuesday, August 2, 2011

பத்து கிராம் தங்கத்தின் விலை 25000

''வரும் தீபாவளிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை இருபத்தைந்தாயிரத்தை தொட்டால் ஆச்சரியமில்லை!''

இப்படி ஒரு தகவல் மார்க்கெட்டில் பரவி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஏழு மாதங்களில் 10 கிராம் தங்கம் 2,486 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் 6,439 ரூபாய் அதிகரித்து, பலரையும் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.


-விகடன்


சவரன் ரூ. 18 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
ஆடிப் பெருக்கு தினமான இன்று வாடிக்கையாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி தடாலடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

-தினமலர்

Wednesday, April 13, 2011

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா, சென்ற 2010 -11ம் நிதியாண்டில், 1,248 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 200 சதவீதம் (416.41 கோடி ரூபாய்) அதிகம். நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா, உள்நாட்டில் அணு மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

Monday, April 4, 2011

அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு

மும்பை: ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, மத்திய கிழக்கு நாடுகளில் கேள்விக்குறியாகி உள்ள அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் அன்னிய நிதி நிறுவனங்களின் பார்வை முன்னேறி வரும் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள், இங்கு அதிகளவில் முதலீடு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11-ம் நிதியாண்டில் அன்னிய நிதி நிறுவனங்கள், 9 லட்சத்து 92 ஆயிரத்து 595 கோடி ரூபாய்க்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தெரிவித்துள்ளது. இதே காலத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள், 8 லட்சத்து 46ஆயிரத்து 157 கோடிரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. இதன்படி அன்னிய நிதி நிறுவனங்கள் இவ்வகை நிதியினங்களில் மேற்கொண்டுள்ள முதலீடு, ஒரு லட்சத்து 46ஆயிரம் கோடிரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இதில் பங்குகளில், ஒரு லட்சத்து 10 கோடி ரூபாயும் , கடன் பத்திரங்களில், 36ஆயிரத்து 317 கோடிரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய பங்குச்சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009-ம் காலண்டர் ஆண்டில்,83ஆயிரத்து 423 கோடிரூபாய்க்கு அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தன. இது கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.பங்குச்சந்தையை பொறுத்தவரை அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு என்பது நிலையற்றதாக கருதப்படுகிறது.முதலீடு எந்த நேரத்திலும் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிதிஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில்சரிவைசந்தித்த இந்திய பங்குச் சந்தை தற்போது எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. இது அன்னிய முதலீடு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

'2ஜி' அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் போன்றவைசர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையிலும், நாட்டின் வலிமையான பொருளாதார வளர்ச்சி காரணமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கையும், பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு பங்கு விற்பனை செய்ய, மத்திய அரசுஅனுமதி அளித்திருப்பதும் அன்னிய முதலீடுகள் குவிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா, எம்.ஓ.ஐ.எல் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில் அதிக அளவில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து புதியசாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டிலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு40ஆயிரம் கோடிரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டிலும் அன்னிய முதலீடு பெருமளவு அதிகரிக்கும் எனலாம்.

Tuesday, March 29, 2011

வெள்ளி வாங்குங்கோ..


தங்கம் விலையைவிட வெள்ளி விலை அதிகரித்துள்ளது.பிற்காலத்தில் வெள்ளிக்கு தேவை அதிகமாக இருப்பதாக தகவல்… ஆக வெள்ளியையும் ஒரு முதலீடாக கருதலாம்.
ஒரு வருடத்திற்கு முன்பு நீங்கள் 10,000 ரூபாய்க்கு வெள்ளி வாங்கியிருந்தால் தற்போது அதன் மதிப்பு -ரூபாய் 20,000 க்கும் அதிகம். ஆச்சரியமாஇருக்குல்ல..

டிவிடெண்ட் - ப்ரில்லா சன் லைப் டாக்ஸ் ரிலீப்

ப்ரில்லா சன் லைப் டாக்ஸ் ரிலீப் 96( Birla Sun Life Tax Relief '96 ) மீயுட்சுவல் பண்டு

இந்த முதலீட்டில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரு யுநிட்க்கு(unit) 4.00 ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றது. உங்களிடம் 100 யுநிட் இருக்குமேயானால் உங்களுக்கு 100x4=400ரூபாய் கிடைக்கும்.

வழங்கப்படும் நாள்: March 31, 2011.

டிவிடென்ட் என்பது கிடைத்த லாபத்தை பிரித்து கொடுப்பது.. இதற்கு நீங்கள் கணக்கு துவங்கும் போது 'டிவிடென்ட் பெய்ட் அவுட்'( DIVIDEND OPTION ) ஆப்சனை தெரிவு செய்திருதால் மட்டுமே இது கிடைக்கும். கிரவுத் (GROWTH) ஆப்சனை தெரிவு செய்திருதால் இந்த லாபம் மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

Friday, March 25, 2011

மீயுட்சுவல் பண்டுகள்( MUTUAL FUNDS )


மீயுட்சுவல் பண்டுகள் என்பவை பங்கு வர்த்தகத்தில் இருந்து சற்று வேறுபட்டது.
பணத்தை பல பேரிடம் பெற்று அதை மார்கெட்டில் முதலீடு செய்வார்கள்.அதில் வரும் லாபம் முதலீடு செய்த அனைவருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும்.
சந்தை உயர்வு தாழ்விற்கு ஏற்ப்ப நீங்கள் கொடுத்த பணம் ஏறவோ இறங்கவோ செய்யும். சுருக்கமாக சொல்லுவதென்றால் நேரடியாக நீங்கள் பங்கு சந்தையில் இறங்காமல் மீயுட்சுவல் பண்ட் நிறுவனத்திடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து அவர்களை நிறுவனம் செய்யும்படி கூறுகின்றீர்கள் என அர்த்தம். இதனால் உங்களுக்கு ரிஸ்க் குறையும். தற்போது நிறைய வகையான மீயுட்சுவல் பண்டுகள் வந்துவிட்டன.

உதாரணமாக ரூபாய் 5000க்கு SBI ONE India Fund மீயுட்சுவல் பண்டினை வாங்கினால்.அப்போதைய அந்த மீயுட்சுவல் பண்டின் நிகர சொத்து மதிப்பு( NAV ) ரூபாய் 20 எனில் உங்களுக்கு 250( 5000/20 ) அளவு என பண்டுகள் வழங்கப்படும்.
NAV ன் மதிப்பு 20 ரூபாயில் இருந்து உயர உயர உங்கள் பணமும் உயரும். ஒரு ஆண்டுகள் கழித்து NAV மதிப்பு 40 ரூபாய் எனில் 250x40=10000 ரூபாய் உங்களிடம்.

கவனிக்க NAV மதிப்பு 20 ரூபாய்க்கும் கீழ் சென்றுவிட்டால் நீங்கள் போட்ட பணம் குறைந்து கொண்டே செல்லும். NAV மதிப்பு பங்கு சந்தையை பொருத்து உயரலாம் அல்லது குறையலாம்.

ஆக மீயுட்சுவல் பண்ட் நிறுவனம் திறமையானதாக இருக்கும் பட்சத்தில் மற்றும் சந்தை உயர்வாக இருக்கும் பட்சத்தில் உங்கள் முதலீடுக்கு உத்திரவாதம் கண்டிப்பாக உண்டு.

மீயுட்சுவல் பண்டில் இரண்டு வகை உண்டு. அவை Open ended, Closed ended.
Open-end Fund
இந்த வகையில் நீங்கள் போட்ட பணத்தை எப்போது நீங்கள் விரும்புகின்றீர்களோ அப்போது எடுக்கலாம்.
Close-end Fund
இந்த வகையில் அவர்கள் கூறிய காலத்திற்கு( 3 ஆண்டுகள் என்க ) இடையே உங்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாது.


லாபம் எப்படி பகிர்தளிக்கப்படுகின்றது.
இதில் இரு வகை உள்ளது
DIVIDEND OPTION
இதில் கிடைக்கும் லாபம் பணம் போட்ட அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் எவ்வளவு அளவு பண்ட் வைத்திருக்கின்றீர்களோ அதுக்கேற்றார் போல் பகிர்ந்தளிக்கப்படும்.
உதாரணமாக 250x4(ஒரு பண்டுக்கு 4 ரூபாய் லாபம் என்க. ) = 1000 ரூபாய் லாபமாக கொடுத்துவிடுவார்கள். காசோலையாகவோ அல்லது உங்கள் பேங்க் கணக்கிலோ வரவு வைக்கப்படும்.
நீங்கள் போட்ட 5000 தொடர்ந்து முதலீடு செய்யப்படும்( நீங்களாக பண்ட்டை விற்காதவரை )
GROWTH OPTION
இந்த முறையில் கிடைத்த லாபம் மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
அதாவது உங்களிடம் உள்ள 250 பண்ட் + 1000 ரூபாய் லாபம் இப்படி மாற்றப்படும்,

1000/40(NAV) = 25 பண்ட்
ஏற்கனவே உள்ள பண்ட் 250 + 25 பண்ட் = 275 பண்ட்ஸ்.
உங்களது லாபம் தற்போது பண்ட்டாக மாற்றப்பட்டு மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

Open-end/Close-end மற்றும் DIVIDEND OPTION/GROWTH OPTION ஆகியவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து சரியான மீயுட்சுவல் பண்ட்ல் முதலீடு செய்யுங்கள்.

நம்பத்தகுந்த பங்குகள்

நம்பத்தகுந்த பங்குகள் நிறைய உள்ளன. அவைகளுள் சில இங்கே,
  • SBI
  • BHEL
  • L&T
  • INFOSYS
  • TCS
  • POWER GRID
  • AXIS BANK
  • RELIANCE INDUSTRIES

நாள் வர்த்தகம்(INTRADAY TRADING)

( நாள் வர்த்தக கமிஷன் ரூபாய் 100 க்கு 0.03 பைசா என்க. பொதுவாக நாள் வர்த்தகத்திற்கு( Intraday ) கமிஷன் தொகை குறைவு )
உதாரணமாக காலை பத்து மணிக்கு SBI வங்கி பங்கை ரூபாய் 100 வீதம் 10 பங்குகள் 1000 ரூபாய் என நீங்கள் முதலீடு செய்கின்றீர்கள்..
அதே நாள் மதியம் 3 மணிக்கு ரூபாய் 120 வீதம் 10 பங்குகளை விற்கிறீர் அதாவது அன்றே வாங்கி அன்றே விற்றால் அதற்கு பெயர்தான் நாள் வர்த்தகம்( INTRADAY TRADING ).

ஆக 120x10 = 1200 - 36 ( கமிஷன் தொகை தோரயமாக ) = 1164.
காலையில் 1000 ரூபாய் முதலீடு செய்து மதியம் 164 ரூபாய் லாபம் பார்க்கின்றீர்கள்.

கவனிக்க காலையில் 100 ரூபாய்க்கு வாங்கி மதியம் அந்த பங்கு 85 ரூபாய் சென்றுவிட்டால் நட்டமாகிவிடும். அந்த சமயத்தில் அந்த பங்கினை விற்காமல் நீண்ட அல்லது குறுகிய காலத்திற்கு அப்பங்கின் விலை உயரும் வரை பொறுத்து பின் விற்கலாம்.

ஆன்லைன் வர்த்தகம் செய்வது எப்படி?

இணையத்தில் வர்த்தகம்( online trading ) செய்ய உங்களுக்கு 'டிமேட்' கணக்கு (DEMAT Account) அவசியம். பின் வரும் தளங்கள் இணைய வர்த்தகத்திற்கு உதவுகின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது இவர்களில் சிறந்தவர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அவர்களே உங்களுக்கு 'டிமேட்' கணக்கு மற்றும் ஆன்லைனில் வர்த்தகம் செய்ய கணக்கு ஆரமித்து கொடுப்பார்கள். சில வங்கிகளும்( SBI, ICICI, HDFC, IDBI ) ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. நீங்கள் அதைகூட தேர்வு செய்யலாம்.

http://www.hsbcinvestdirect.co.in
http://www.angeltrade.com
http://www.standardchartered-wealthmanagers.co.in
http://www.kotaksecurities.com
http://www.networthdirect.com
http://www.geojitbnpparibas.com
http://www.religareonline.com
http://www.idbipaisabuilder.in
http://www.reliancemoney.com
http://www.hdfcsec.com
http://www.motilaloswal.com
http://www.5paisa.com
http://www.indiabulls.com
http://www.sharekhan.com
http://www.icicidirect.com
http://www.sbicapsec.com/

சிறந்த இணைய வர்த்தக தளங்களை எப்படி தேர்வு செய்வது?
1. பங்குகளை இவர்கள் வழியாக வாங்கும் போதோ விற்கும் போதோ நாம் குறிப்பிட்ட கமிஷன் ( commission ) தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தக தளத்தை பொறுத்து மாறுபடும். குறைவான கமிஷனாக இருதால் நமக்கு பணம் மிச்சப்படும்.
உதாரணமாக ரூபாய் 100 க்கு பங்குகளை வாங்கினாலோ அல்லது விற்றாலோ 0.30 பைசா நாம் கமிசனாக ( commission ) கொடுக்க வேண்டியது இருக்கும்.

2. இரண்டாவதாக ஆன்லைன் வர்த்தக இணைய தளத்தின்( online trading sites ) தரம், வேகம் நன்றாக இருத்தல் அவசியம்.

3. சில தளங்கள் இலவசமாக வாங்கும்(buy) & விற்கும்(sell) ஆலோசனையை வழங்கும்.. அதுவும் சரியானதாக இருத்தல் அவசியம். அவர்கள் சொல்லுகின்றர்களே என்று வாங்கினால் நஷ்டம் நமக்குதான்.
இது போன்ற அம்சங்களை பார்த்து முடிவெடுத்து..விபரம் தெரிந்தவரிடம் நன்றாக விசாரித்து பின் ஆன்லைன் வர்த்தகத்தை தொடருங்கள்..

கணக்கு ஆரம்பிக்க இவைகள் கட்டாயம் தேவை..
பான்(PAN) கார்டு, வீடு முகவரி உறுதிசெய்யகூடிய சான்று, 3-6 மாத பேங்க் சான்று( bank statement ), புகைப்பட உறுதி சான்று( photo ID )

முதலீடு - தங்கம்

Gold
குவான்டம் கோல்டு இ.டி.எஃப். திட்டத்தில் அரை கிராம் தங்கம்கூட வாங்க முடியும். இந்த ஃபண்டின் என்.ஏ.வி. மதிப்பு, மார்ச் 14-ம் தேதி நிலவரப்படி 1010.25 ரூபாய். எனவே, இந்த குவான்டம் கோல்டு இ.டி.எஃப்-ல் நீங்கள் 1,000 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். இந்த ஃபண்ட் கடந்த ஓராண்டில் 24.65%, மூன்றாண்டில் 15.9% வருமானம் கொடுத்திருக்கிறது. இதில், முதலீடு செய்ய உங்களுக்கு டீமேட் கணக்கு இருப்பது அவசியம்.

SYMBOL: QGOLDHALF