Friday, January 20, 2012

ரிஸ்க் இல்லாத முதலீடு

ரிஸ்க் இல்லாத முதலீடு இல்லை என்றாலும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ரிஸ்க் குறைவானவை என்பதோடு மிதமான வருமானம் தருபவை. இந்த வகை ஃபண்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஜே.எம். ஜி - செக்யூரிட்டி ரெகுலர் . இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.40% வருமானத்தையும், ஆரம்பம் முதல் 10.24% வருமானத்தையும் தந்துள்ளது

Thursday, January 19, 2012

நல்ல லாபம் கிடைக்கும் பங்கு

சில துறை பங்குகள் சில சமயங்களில் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கும். அந்த துறைக்கு இப்போது நல்ல பிஸினஸ் இல்லை என்கிற ஒரே காரணம் தவிர, அந்த பங்கில் எந்த பிரச்னையும் இருக்காது. இது மாதிரி பின்னணி கொண்ட பங்குகளை விலை குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போட்டால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். என்ன பங்கு என்றுதானே கேட்கிறீர்கள்? செயில் என சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்குதான் அது. டிசம்பர் 28-ம் தேதி இந்த பங்கொன்றின் விலை ரூ.80.

Monday, August 22, 2011

போலிகள் ஜாக்கிரதை!

எச்சரிக்கும் செக் லிஸ்ட்..
  • வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.

  • பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

  • சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.

  • சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.

  • மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!

  • குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.

  • சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.

  • அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!

Tuesday, August 9, 2011

ரூ.19,000-ஐ தாண்டியது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.19,504-க்கு விற்பனையானது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,438 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.688 அதிகரித்தது. ஒரு கிராமுக்கு ரூ.86 உயர்ந்தது.

அதேவேளையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.62.95-க்கும், பார் வெள்ளியின் விலை ரூ.58,845-க்கும் விற்கப்பட்டது.

Tuesday, August 2, 2011

பத்து கிராம் தங்கத்தின் விலை 25000

''வரும் தீபாவளிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை இருபத்தைந்தாயிரத்தை தொட்டால் ஆச்சரியமில்லை!''

இப்படி ஒரு தகவல் மார்க்கெட்டில் பரவி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஏழு மாதங்களில் 10 கிராம் தங்கம் 2,486 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் 6,439 ரூபாய் அதிகரித்து, பலரையும் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.


-விகடன்


சவரன் ரூ. 18 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
ஆடிப் பெருக்கு தினமான இன்று வாடிக்கையாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி தடாலடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

-தினமலர்

Wednesday, April 13, 2011

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா, சென்ற 2010 -11ம் நிதியாண்டில், 1,248 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டை விட 200 சதவீதம் (416.41 கோடி ரூபாய்) அதிகம். நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா, உள்நாட்டில் அணு மின் நிலையங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வினியோகம் செய்து வருகிறது.

Monday, April 4, 2011

அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு

மும்பை: ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, மத்திய கிழக்கு நாடுகளில் கேள்விக்குறியாகி உள்ள அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் அன்னிய நிதி நிறுவனங்களின் பார்வை முன்னேறி வரும் நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது.

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அன்னிய நிதி நிறுவனங்கள், இங்கு அதிகளவில் முதலீடு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.

சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2010-11-ம் நிதியாண்டில் அன்னிய நிதி நிறுவனங்கள், 9 லட்சத்து 92 ஆயிரத்து 595 கோடி ரூபாய்க்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதாக பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தெரிவித்துள்ளது. இதே காலத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள், 8 லட்சத்து 46ஆயிரத்து 157 கோடிரூபாய் மதிப்புள்ள பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. இதன்படி அன்னிய நிதி நிறுவனங்கள் இவ்வகை நிதியினங்களில் மேற்கொண்டுள்ள முதலீடு, ஒரு லட்சத்து 46ஆயிரம் கோடிரூபாய் என்ற அளவிற்கு உள்ளது. இதில் பங்குகளில், ஒரு லட்சத்து 10 கோடி ரூபாயும் , கடன் பத்திரங்களில், 36ஆயிரத்து 317 கோடிரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்திய பங்குச்சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2009-ம் காலண்டர் ஆண்டில்,83ஆயிரத்து 423 கோடிரூபாய்க்கு அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தன. இது கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.பங்குச்சந்தையை பொறுத்தவரை அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு என்பது நிலையற்றதாக கருதப்படுகிறது.முதலீடு எந்த நேரத்திலும் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. ஆனால், தற்போது உலகளாவிய பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முதலீடு தொடர்ந்து அதிகரிக்கும் என்று நிதிஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாண்டு தொடக்கத்தில்சரிவைசந்தித்த இந்திய பங்குச் சந்தை தற்போது எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. இது அன்னிய முதலீடு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

'2ஜி' அலைக்கற்றை ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி முறைகேடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் போன்றவைசர்வதேச நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் ஈர்த்துள்ளது.

இந்த நிலையிலும், நாட்டின் வலிமையான பொருளாதார வளர்ச்சி காரணமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு மேற்கொண்டு வருகின்றன.

மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்து வரும் நடவடிக்கையும், பொதுத்துறை நிறுவனங்களில் குறிப்பிட்ட அளவிற்கு பங்கு விற்பனை செய்ய, மத்திய அரசுஅனுமதி அளித்திருப்பதும் அன்னிய முதலீடுகள் குவிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த நிதியாண்டில் பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா, எம்.ஓ.ஐ.எல் மற்றும் ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனங்களின் பங்கு வெளியீட்டில் அதிக அளவில் அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து புதியசாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டிலும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு40ஆயிரம் கோடிரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டிலும் அன்னிய முதலீடு பெருமளவு அதிகரிக்கும் எனலாம்.