- RALLIS( A TATA GROUP COMPANY )
- COROMANDEL( CHENNAI BASED MURUGAPPA GROUP COMPANY )
- CHAMBLFERT
- JISLJALEQS
- BAYERCROP( A GERMAN BASED COMPANY )
Friday, January 20, 2012
லாபம் தரும் விவசாய பங்குகள்
இளமையிலேயே முதலீடு..
ஓய்வு காலத்திற்கான முதலீட்டை 45 வயதிற்கு பிறகுதான் ஆரம்பிக்க வேண்டும் என்றில்லை. சம்பாதிக்க தொடங்கியவுடனேயே ஆரம்பிக்கலாம். 25 வயதில் இன்றைக்குச் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பவர்கள், யூ.டி.ஐ. ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான் மற்றும் டெம்பிள்டன் ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பிளான்களில் மாதம் 500 ரூபாய் வீதம் முதலீடு செய்தால், 30 ஆண்டு கழித்து (ஆண்டுக்கு 10% வருமானம் கிடைத்தால்) கிடைக்கும் வருமானம் 11. 30 லட்சம் ரூபாய்.
ரிஸ்க் இல்லாத முதலீடு
ரிஸ்க் இல்லாத முதலீடு இல்லை என்றாலும், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ரிஸ்க் குறைவானவை என்பதோடு மிதமான வருமானம் தருபவை. இந்த வகை ஃபண்டுக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு ஜே.எம். ஜி - செக்யூரிட்டி ரெகுலர் . இந்த ஃபண்டின் மூலம் திரட்டப்படும் நிதி அரசாங்க கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாக இருக்கும். இந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 9.40% வருமானத்தையும், ஆரம்பம் முதல் 10.24% வருமானத்தையும் தந்துள்ளது
Thursday, January 19, 2012
நல்ல லாபம் கிடைக்கும் பங்கு
சில துறை பங்குகள் சில சமயங்களில் மிகக் குறைவான விலைக்கு கிடைக்கும். அந்த துறைக்கு இப்போது நல்ல பிஸினஸ் இல்லை என்கிற ஒரே காரணம் தவிர, அந்த பங்கில் எந்த பிரச்னையும் இருக்காது. இது மாதிரி பின்னணி கொண்ட பங்குகளை விலை குறையக் குறைய கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிப் போட்டால், நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். என்ன பங்கு என்றுதானே கேட்கிறீர்கள்? செயில் என சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பங்குதான் அது. டிசம்பர் 28-ம் தேதி இந்த பங்கொன்றின் விலை ரூ.80.
Monday, August 22, 2011
போலிகள் ஜாக்கிரதை!
எச்சரிக்கும் செக் லிஸ்ட்..
- வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பொது மக்களிடமிருந்து டெபாசிட் திரட்ட ஆர்.பி.ஐ-யிடம் அனுமதி வாங்கியிருக்கிறதா என்று அவசியம் பாருங்கள்.
- பதிவு செய்யப்பட்ட லிமிடெட் நிறுவனம் என்பது போன்ற விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதீர்கள். ஒரு நிறுவனத்தை கம்பெனியாக பதிவு செய்வதற்கும், நிதி நிறுவனமாகப் பதிவு செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
- சீட்டு கம்பெனி எனில், சீட்டு ஃபண்ட் சட்டப்படி அந்தந்த மாநில அரசின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்டதா என பாருங்கள்.
- சில நிறுவனங்கள் தவணை முறையில் பணம் செலுத்தச் சொல்லி அதற்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் மற்றும் நிலம் கொடுப் பதாகவும் கூறுவது உண்டு. இன்ஷூரன்ஸ் கவரேஜ் கொடுக்க வேண்டுமெனில், அந்த நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ. அனுமதியுடன் மட்டுமே செய்ய முடியும். நிலம் கொடுக்கிறோம் என சொல்லிவிட்டு கண்ணுக்குத் தெரியாத ஊர்களில் இருக்கும் பாலைவனத்தில் இடம் ஒதுக்கியிருப்பார்கள்.
- மார்க்கெட்டில் இருக்கும் வட்டி நிலவரத்தைவிட, மிக அதிகப்படியான வட்டி தருவதாகச் சொன்னால் உறுதியாகச் சொல்லி விடலாம் அந்த நிறுவனம் போலியானது என்று!
- குறிப்பாக பெண்களை மையப்படுத்தி, அவர்களைக் கவரும் வகைகளில் திட்டங்கள் இருந்தால் கவனம் தேவை.
- சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அலுவலகம் திறப்பது, அவர்கள் கையால் பத்திரங்கள் கொடுப்பது போன்றவைகள் உங்களை திசை திருப்பும் வேலைகளில் ஒன்றாகும்.
- அவசரப்படுத்தி முதலீடு செய்ய வைப்பது, ஏற்கெனவே இந்த நிறுவனத்தில் பணம் போட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்தவர் என யாராவது இரண்டு நபர்களை அறிமுகம் செய்துவைப்பது போன்ற வையும் தில்லாலங்கடிக்கான அறிகுறிகளே!
Tuesday, August 9, 2011
ரூ.19,000-ஐ தாண்டியது தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.19,504-க்கு விற்பனையானது.ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.2,438 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் சவரன் ஒன்றுக்கு ரூ.688 அதிகரித்தது. ஒரு கிராமுக்கு ரூ.86 உயர்ந்தது.
அதேவேளையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.62.95-க்கும், பார் வெள்ளியின் விலை ரூ.58,845-க்கும் விற்கப்பட்டது.
Tuesday, August 2, 2011
பத்து கிராம் தங்கத்தின் விலை 25000
''வரும் தீபாவளிக்குள் பத்து கிராம் தங்கத்தின் விலை இருபத்தைந்தாயிரத்தை தொட்டால் ஆச்சரியமில்லை!''
இப்படி ஒரு தகவல் மார்க்கெட்டில் பரவி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஏழு மாதங்களில் 10 கிராம் தங்கம் 2,486 ரூபாய் உயர்ந்திருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டில் 6,439 ரூபாய் அதிகரித்து, பலரையும் ஏக்கப் பெருமூச்சுவிட வைத்திருக்கிறது.
-விகடன்
சவரன் ரூ. 18 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
ஆடிப் பெருக்கு தினமான இன்று வாடிக்கையாளர்களை மிரள வைக்கும் அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளி தடாலடியாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
-தினமலர்
Subscribe to:
Posts (Atom)