Friday, March 25, 2011

மீயுட்சுவல் பண்டுகள்( MUTUAL FUNDS )


மீயுட்சுவல் பண்டுகள் என்பவை பங்கு வர்த்தகத்தில் இருந்து சற்று வேறுபட்டது.
பணத்தை பல பேரிடம் பெற்று அதை மார்கெட்டில் முதலீடு செய்வார்கள்.அதில் வரும் லாபம் முதலீடு செய்த அனைவருக்கும் சமமாக பிரித்துக்கொடுக்கப்படும்.
சந்தை உயர்வு தாழ்விற்கு ஏற்ப்ப நீங்கள் கொடுத்த பணம் ஏறவோ இறங்கவோ செய்யும். சுருக்கமாக சொல்லுவதென்றால் நேரடியாக நீங்கள் பங்கு சந்தையில் இறங்காமல் மீயுட்சுவல் பண்ட் நிறுவனத்திடம் உங்கள் பணத்தை ஒப்படைத்து அவர்களை நிறுவனம் செய்யும்படி கூறுகின்றீர்கள் என அர்த்தம். இதனால் உங்களுக்கு ரிஸ்க் குறையும். தற்போது நிறைய வகையான மீயுட்சுவல் பண்டுகள் வந்துவிட்டன.

உதாரணமாக ரூபாய் 5000க்கு SBI ONE India Fund மீயுட்சுவல் பண்டினை வாங்கினால்.அப்போதைய அந்த மீயுட்சுவல் பண்டின் நிகர சொத்து மதிப்பு( NAV ) ரூபாய் 20 எனில் உங்களுக்கு 250( 5000/20 ) அளவு என பண்டுகள் வழங்கப்படும்.
NAV ன் மதிப்பு 20 ரூபாயில் இருந்து உயர உயர உங்கள் பணமும் உயரும். ஒரு ஆண்டுகள் கழித்து NAV மதிப்பு 40 ரூபாய் எனில் 250x40=10000 ரூபாய் உங்களிடம்.

கவனிக்க NAV மதிப்பு 20 ரூபாய்க்கும் கீழ் சென்றுவிட்டால் நீங்கள் போட்ட பணம் குறைந்து கொண்டே செல்லும். NAV மதிப்பு பங்கு சந்தையை பொருத்து உயரலாம் அல்லது குறையலாம்.

ஆக மீயுட்சுவல் பண்ட் நிறுவனம் திறமையானதாக இருக்கும் பட்சத்தில் மற்றும் சந்தை உயர்வாக இருக்கும் பட்சத்தில் உங்கள் முதலீடுக்கு உத்திரவாதம் கண்டிப்பாக உண்டு.

மீயுட்சுவல் பண்டில் இரண்டு வகை உண்டு. அவை Open ended, Closed ended.
Open-end Fund
இந்த வகையில் நீங்கள் போட்ட பணத்தை எப்போது நீங்கள் விரும்புகின்றீர்களோ அப்போது எடுக்கலாம்.
Close-end Fund
இந்த வகையில் அவர்கள் கூறிய காலத்திற்கு( 3 ஆண்டுகள் என்க ) இடையே உங்கள் பணத்தை திரும்ப எடுக்க முடியாது.


லாபம் எப்படி பகிர்தளிக்கப்படுகின்றது.
இதில் இரு வகை உள்ளது
DIVIDEND OPTION
இதில் கிடைக்கும் லாபம் பணம் போட்ட அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நீங்கள் எவ்வளவு அளவு பண்ட் வைத்திருக்கின்றீர்களோ அதுக்கேற்றார் போல் பகிர்ந்தளிக்கப்படும்.
உதாரணமாக 250x4(ஒரு பண்டுக்கு 4 ரூபாய் லாபம் என்க. ) = 1000 ரூபாய் லாபமாக கொடுத்துவிடுவார்கள். காசோலையாகவோ அல்லது உங்கள் பேங்க் கணக்கிலோ வரவு வைக்கப்படும்.
நீங்கள் போட்ட 5000 தொடர்ந்து முதலீடு செய்யப்படும்( நீங்களாக பண்ட்டை விற்காதவரை )
GROWTH OPTION
இந்த முறையில் கிடைத்த லாபம் மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
அதாவது உங்களிடம் உள்ள 250 பண்ட் + 1000 ரூபாய் லாபம் இப்படி மாற்றப்படும்,

1000/40(NAV) = 25 பண்ட்
ஏற்கனவே உள்ள பண்ட் 250 + 25 பண்ட் = 275 பண்ட்ஸ்.
உங்களது லாபம் தற்போது பண்ட்டாக மாற்றப்பட்டு மீண்டும் சந்தையில் முதலீடு செய்யப்படும்.

Open-end/Close-end மற்றும் DIVIDEND OPTION/GROWTH OPTION ஆகியவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து சரியான மீயுட்சுவல் பண்ட்ல் முதலீடு செய்யுங்கள்.

No comments:

Post a Comment